கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பறக்கை சாலையில் உள்ள பிஸ்மி நகர், பாத்திமா நகர், ஐ.எஸ்.இ.டி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை வசதியில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதிகளில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதியும் கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் இவற்றை சரிபடுத்துமாறு வலியுறுத்தி கன்னியாகுமரி தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டின் தலைமையில் ஏராளமானார் கண்டன ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். இந்த பணிகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் பெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க; 49.9 விழுக்காடு இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி மறைமுகமாக நிர்பந்திக்கிறதா மத்திய அரசு? நீதிபதிகள் கேள்வி