ETV Bharat / state

பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர் கைது..! - தனியார் சேவை நிறுவனம் என்ற பெயரில் உயர்தர விபச்சாரம்

கன்னியாகுமரி: தனியார் சேவை நிறுவனம் என்ற பெயரில் பாலியல் தொழிலை வளர்க்கும் தரகர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

விபச்சார தொழில் செய்துவந்த தரகர்கள்
author img

By

Published : Sep 6, 2019, 11:41 PM IST

திருநெல்வேலி வடக்கு வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரது மகன் பீட்டர் மார்டின்(35). முதுகலை வணிகவியல் பட்டதாரியான இவர், திருநெல்வேலி மாவட்டக் கல்லூரிகளின் மாணவ மாணவிகளுக்கு புராஜெக்ட் போன்றவற்றைச் செய்து கொடுக்கும் நிறுவனம் நடத்துகிறார்.

இந்நிலையில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் உள்ள 20 வயது மதிக்கத்தக்க பட்டதாரி இளம்பெண், கடந்த வாரம் பீட்டர் மார்டின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அந்த இளம் பெண்ணின் குடும்ப சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திய பீட்டர் மார்டின், அவரை நேற்றிரவு வாடகை காரில் ஒருவருடன் அழைத்துக் கொண்டு கன்னியாகுமரியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் அறையைப் பதிவு செய்ய முற்பட்டுள்ளார்.

விபச்சார தொழில் செய்துவந்த தரகர்கள்

ஆனால், விடுதியில் அறை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஆத்திரத்தில் அங்குள்ள ஊழியர்களுடன் தகராற்றில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகக் குமரி காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, இருவரையும் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பீட்டர் மார்டின் தனது நிறுவனத்திற்கு வரும் பல இளம் பெண்களை, ஆசை வார்த்தை கூறி அவர்களின் புகைப்படத்தை முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கும் பாலியல் தொழில் தரகராக இருந்துள்ளார். மேலும் பீட்டர் மார்டின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது அதில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், குடும்ப பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது.

இதையடுத்து பீட்டர் மார்டினுடன் பிடிபட்ட கார் ஓட்டுநர் லட்சுமணன்(27) உட்பட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் லட்சுமணனுக்கு இன்னும் ஓரிரு நாளில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இளைஞர்களோடு பிடிபட்ட பெண்ணுக்குப் பெற்றோர் யாருமில்லாததால் அப்பெண்ணை அரசு பெண்கள் காப்பகத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Intro:திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சேவை நிறுவனம் நடத்தி ஹைடெக் விபச்சாரம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த ப்ரோக்கர் உட்பட 2 வாலிபர்களை கன்னியாகுமரியில் இன்று போலீசார் கைது செய்தனர். விபச்சாரத்திற்கு பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல்.

Body:திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சேவை நிறுவனம் நடத்தி ஹைடெக் விபச்சாரம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த ப்ரோக்கர் உட்பட 2 வாலிபர்களை கன்னியாகுமரியில் இன்று போலீசார் கைது செய்தனர். விபச்சாரத்திற்கு பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல்.

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்த டேனியல் என்பவரது மகன் பீட்டர் மார்ட்டின் (வயது 35) எம் காம் பட்டதாரியான இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், மாணவ, மாணவிகளுக்கு ப்ராஜெக்ட் போன்றவைகளை செய்து கொடுக்கும் சேவை நிறுவனம் நடத்துகிறார் .தனது நிறுவனத்துக்கு வரும் கல்லூரி பெண்களை ஆசை வார்த்தை கூறியும் மிரட்டியும் ஹைடெக் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள 20 வயது மதிக்கத்தக்க பட்டதாரி இளம்பெண் கடந்த வாரம் பீட்டர் மார்ட்டின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் .அந்த இளம்பெண்ணின் குடும்ப சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய பீட்டர் மார்ட்டின் அவரை ஆசை வார்த்தை கூறி நேற்று இரவு வாடகை சொகுசு காரில் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு கன்னியாகுமரியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அறையை புக் செய்தார் .ஓட்டலில் அறை கொடுக்காத ஆத்திரத்தில் அங்குள்ள ஊழியர்களுடன் தகராறில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இரண்டு பேரையும் பிடித்தனர் .பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பீட்டர் மார்ட்டின் தனது நிறுவனத்திற்கு வரும் பல இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி அவர்களின் போட்டோவை வாங்கி முக்கிய விஐபிகளுக்கு அனுப்பி வைக்கும் ஹைடெக் விபச்சாரம் புரோக்கராக இருந்தது தெரியவந்தது. மேலும் பீட்டர் மார்ட்டீன் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் குடும்ப பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது. இதையடுத்து பீட்டர் மார்ட்டீனுடன் பிடிபட்ட சொகுசு கார் டிரைவர் லட்சுமணன் (வயது27) உட்பட இருவரையும் விபச்சார தடை சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இன்று கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர் .டிரைவர் லட்சுமணனுக்கு இன்னும் ஓரிரு நாளில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது .மேலும் இளைஞர்களோடு பிடிபட்ட பெண்ணுக்கு தாய் தந்தை யாருமில்லாததால் அப்பெண்ணை அரசு பெண்கள் காப்பகத்தில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

குறிப்பு: கன்னியாகுமரியில் கைதான பீட்டர் மார்டின் தான் அழைத்து வந்த பெண்ணை உயர் அதிகாரிகளுக்கு மற்றும் விஐபிகளுக்கு விருந்தாக்க முடிவு செய்து அழைத்து வந்ததாகவும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இதேபோல் ஒரு மாணவியை அழைத்து வந்து ஐந்து விஐபிகளுக்கு விருந்தாகியது விசாரணையில் தெரியவந்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.