ETV Bharat / state

கால்வாயில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து - கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே பட்டிணம் கால்வாயில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

kanyakumari  school bus overturns in Canal  Private school  school bus overturns in Canal near kanyakumari  Private school bus overturns in Canal  kanyakumari  kanyakumari school bus accident  kanyakumari news  kanyakumari latest news  bus accident  பள்ளி வாகனம்  போலீசார் விசாரணை  விசாரணை  கால்வாயில் கவிழ்ந்த பள்ளி வாகனம்  பட்டிணம் கால்வாயில் தனியார் பள்ளி பேருந்து  கன்னியாகுமரி  தனியார் பள்ளி
கால்வாயில் கவிழ்ந்த பள்ளி வாகனம்
author img

By

Published : Nov 28, 2022, 1:59 PM IST

கன்னியாகுமரி: சித்தரங்கோடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியிலிருந்து இன்று (நவ. 28) காலையில் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி வாகனம் சென்றுள்ளது. கஞ்சிமடம் பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்கு பள்ளி வாகன ஓட்டுநர் முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளி வாகனம் பட்டிணம் கால்வாய்க்குள் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து அப்பகுதியினர் விரைந்து செயல்பட்டு வாகனத்திலிருந்து நான்கு பள்ளி மாணவர்களையும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் மீட்டனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் காயமின்றி தப்பினர். எனினும் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பழனி நூற்பாலையில் பாய்லர் வெடித்து பெரும் விபத்து..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.