இந்த ஆர்ப்பாட்டத்தில், “2019இல் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான 17b நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை நீதியரசர் பொன். கலையரசன் குழு பரிந்துரைப்படி 10 விழுக்காடு உயர்த்திட வேண்டும்” உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக ரயிலை மறித்த மனிதநேய மக்கள் கட்சியினர்!