கன்னியாகுமரி: தமிழ்நாடு - கேரள எல்லை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசு விரந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கேரளா செல்லும் அணுகுச் சாலையில் அமைந்திருக்கும் சோதனைச்சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை காரில் வந்த இரண்டு பேர், திடீரென மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு சுலபமாக தப்பியுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
எஸ்ஐ சுட்டுக் கொலை - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு!
இந்தச் சம்பவத்தை செய்துவிட்டு தப்பியவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாகவும் தற்போது செய்தி வலம்வருகிறது. நேற்று கேரளாவில் நடந்த முழு கடையடைப்பு, ஆளும் கம்யூனிச அரசால் குடியுரிமைத் திருத்தச் சட்டதிற்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆகியவை இது போன்ற பயங்கரவாதிகள் கொலை ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதற்கு ஏதுவாக அமைகிறதா என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.
ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் கைது !
இந்தக் கொலைச் சம்பவத்தை காவல் உதவி ஆய்வாளர் வில்சன் என்ற தனிக்காவலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதாமல், தமிழ்நாடு காவல் துறையின் மீது நடத்தப்பட்ட ஓர் வன்முறை தாக்குதலாகக் கருதி அரசு சிறிதும் அலட்சியம் காட்டாமல் சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மென்பொருளை உருவாக்கி பயங்கரவாதிக்கு உதவிய மாணவர் கைது
மேலும், 2014ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட, இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமாரின் கொலையில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளான சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதோடு, மேலும் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு வேறு சிலருடன் தொடர்பில் இருப்பது, நேற்று கைது செய்யப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் மூலம் விளங்குகிறது.
பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகள் சப்ளை - மூன்று பேர் கைது
எனவே, பயங்கரவாதிகளை விரைந்து கண்டறிந்து, அவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன்னிறுத்தி, அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.