ETV Bharat / state

பொங்கல் பண்டிகை: உயர்ந்த பூக்கள் விலை! - பூக்கள் விலை

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகை கிடு கிடுவென உயர்ந்த பூக்கள் விலை!

author img

By

Published : Jan 13, 2021, 3:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை மிகவும் பெயர் பெற்றது. இங்கு மதுரை, திண்டுக்கல், ராயகோட்டை, பெங்களூரு, ஓசூர் மற்றும் உள்ளூர் பகுதிகளான ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், குமாரபுரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 20 டன் பூக்கள் வரத்து இருக்கும். அதைப்போல் இங்கிருந்து உள் மாநிலத்திற்கு மட்டுமல்லாது கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி நடைபெறும்.

இந்நிலையில் நாளை (ஜன.14) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் தோவாளை மலர் சந்தையில் அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் (ஜன.11) கிலோ ஒன்றிற்கு 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ தற்போது 2500 ரூபாயாகவும், பிச்சி பூ 600 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், கேந்தி 60 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும், ரோஜா 170 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும், வெள்ளை சிவந்தி 100 ரூபாயிலிருந்து 190 ரூபாயாகவும், அரளி 140 ரூபாயிலிருந்து 280 ரூபாயாகவும் என அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்து விற்பனையாகிவருகிறது.

பொங்கல் பண்டிகை கிடு கிடுவென உயர்ந்த பூக்கள் விலை

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, பூக்கள் அதிகளவில் வாங்க சந்தைக்கு வருவது மகிழச்சி அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.