ETV Bharat / state

‘தினகரன் பொய் சொல்லி தேர்தலை சந்திப்பவர்’ - பொன்னார் காட்டம் - பாஜக வேட்பாளர்

கன்னியாகுமரி: அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொய் சொல்லி தேர்தலை சந்திப்பவர் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Apr 11, 2019, 11:06 PM IST

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்டம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, தக்கலை பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்ட பொன்னார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,

"தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கன்னியாகுமரி தொகுதியில் அமமுக சார்பில் பலவீனமான வேட்பாளரை நிறுத்திடக்கோரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச விரும்புவதாகவும், அக்கட்சியின் நிர்வாகி கருப்பு முருகானந்தம் தினகரனுடைய உதவியாளர் ஜனாவை போனில் தொடர்பு கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் பேசியதாகக் கூறப்படும் கருப்பு முருகானந்தத்திற்கும், தினகரனுக்கும் இடையே பல காலமாக நெருங்கிய நட்புள்ளது. வேட்பாளர் தேர்வு குறித்து என்னை கேட்டிருந்தால், பலமான வேட்பாளரையே தேர்வு செய்ய சொல்லியிருப்பேன். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்வது போன்று, பத்தாயிரம் பொய் சொல்லி தேர்தலை சந்திக்கிறார் தினகரன்" என கூறினார்.

கன்னியாகுமரி:  அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பொய் சொல்லி தேர்தலை சந்திப்பவர் என்று பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குமரி மாவட்ட பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.தக்கலை பகுதியில் இன்று பிரசாரம் செய்த பொன்ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலாளர் தினகரன், ‘கன்னியாகுமரி தொகுதியில் அ.ம.மு.க., சார்பில் பலவீனமான வேட்பாளரை நிறுத்திட கோரி பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசவிரும்புவதாக,அக்கட்சியின் நிர்வாகி கருப்பு முருகானந்தம் என்பவர்,என்னுடைய உதவியாளர் ஜனாவுடைய போனில் தொடர்பு கொண்டார்’ என்று கூறியிருந்தார்.

அந்த விவகாரத்தில் பேசியதாகக் கூறப்படும் கருப்பு முருகானந்தத்திற்கும், தினகரனுக்கும் இடையே பல காலமாக நெருங்கிய நட்புள்ளது.வேட்பாளர் தேர்வு குறித்து என்னை கேட்டிருந்தால், பலமான வேட்பாளரையே தேர்வு செய்ய சொல்லியிருப்பேன்.ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்வது போன்றுபத்தாயிரம் பொய்சொல்லி தேர்தலை சந்திக்கிறார் தினகரன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.