ETV Bharat / state

முதலமைச்சர் பெங்களூரு சென்றது கண்டிக்கத்தக்கது - பொன் ராதாகிருஷ்ணன் - நாகர்கோவில்

மேகதாது அணை கட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை தந்தால் மட்டுமே கூட்டணிக்கு கைகோர்ப்போம் என்று ஸ்டாலின் கூறியிருக்க வேண்டும் என்றும், ஆனால் வாக்குறுதியை பெறாமல் பெங்களூரு சென்றது கண்டிக்கத்தக்கது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

pon radhakrishnan
பொன் ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Jul 19, 2023, 8:01 AM IST

Updated : Jul 19, 2023, 8:12 AM IST

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கன்னியாகுமரி: கர்நாடகாவில் எதிர்கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்று முடிவடைந்தது. இதனிடையே மேகதாது அணை விவகாரம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பெங்களூரு சென்றதை கண்டித்து
பாஜகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், “காவிரி நீரை எதிர் நோக்கி இருக்கும் காலத்தில், இப்போது இருக்கும் நீரை கூட கட்டுப்படுத்தி மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா மற்றும் அதற்கு மூளையாக இருக்கும் டி.கே.சிவகுமார் ஆகியோரது கைகளை குலுக்கிக் கொண்டு, சோனியா காந்தியின் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்கள். இது வெந்து கொண்டிருக்கும் புண்ணில் ஈட்டியை பாய்ச்சுவதுபோல் உள்ளது.

அன்றைய சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசாங்கம், அணை கட்டும் நடவடிக்கையை தடுத்துள்ளது. அதன் பிறகும் 1914இல் விசாரணை முடித்து அணை கட்டலாம் என்று சொல்லியும், அணை கட்டும்போது ஒப்பந்தம் ஏற்பட்டு 41 டிஎம்சிக்கு அனுமதி இல்லை என்று கூறி, 11 டிஎம்சிக்கு அணை கட்ட அனுமதி பெற்ற கர்நாடக அரசு, 41 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்ட திட்டமிட்டு கட்டியதிலிருந்து பிரச்னை ஏற்பட்டது.

1924ஆம் ஆண்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால், 1971இல் காங்கிரஸ் மற்றும் திமுக சேர்ந்து தேர்தலைச் சந்தித்த பிறகு 1974இல் புதுப்பிக்க வேண்டியது புதுப்பிக்கப்படவில்லை. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் பலி.

கர்நாடகாவில் இருந்து ஜூலை வரை 12,213 டிஎம்சி தண்ணீர் வர வேண்டிய நிலையில், 2,993 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இவர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆலோசனை செய்கிறார்கள். வர வேண்டிய தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வராத நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது.

மேலும், புதிய அணையை மேகதாதுவில் கட்டுவோம் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கு துணை நின்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுகவினர். பாஜக ஆரம்பத்தில் இருந்து மேகதாது அணையை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக மாநிலம் சென்றதை கண்டிக்கிறோம். மேகதாதுவில் அணை கட்டினால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாகும்.

அதுமட்டுமல்லாமல், மேகதாது அணை கட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை தந்தால் மட்டுமே கூட்டணிக்கு கைகோர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் வாக்குறுதியை பெறவில்லை. கர்நாடகம் சென்றிருப்பது கூட்டணிக்கான கைக்கோர்ப்பு இல்லை, தமிழ்நாட்டு விவசாயிகள் கழுத்தை நெரிக்கும் கைக்கோர்ப்பு. இவர்களது ஒப்பந்தம் ரகசியமாக இருக்கும். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தர மாட்டேன் என்று பாஜக சொன்னாலும் தவறு, காங்கிரஸ் சொன்னாலும் தவறு.

அமலாக்கத்துறை நடவடிக்கை அரசியல் என்று கூறும் திமுகவினர், தமிழ்நாடு அரசு, நாங்கள் ஊழல் செய்வோம், எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வாருங்கள். கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்ற நிலைக்கு மாறாக நியாயமான நடைமுறையில் இருந்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “2024-ல் புதிய இந்தியா உருவாகும்” - எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

Last Updated : Jul 19, 2023, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.