கன்னியாகுமரி: மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் குறித்து பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது "பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். விவசாய இடு பொருட்களை விற்பதில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறைய வாய்ப்புள்ளது. கரோனா தொற்று இல்லாத பகுதிகளில் மக்களை தனிமைப்படுத்துவதை வரைமுறைப்படுத்த வேண்டும்.
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 am
புலம் பெயர்வோர் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு போகும்போது, அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இது இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும். எனவே அதனை எளிமைப்படுத்த வேண்டும்.
10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10 am
சான்றிதழ் பெறுவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாத வண்ணம் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். மதுபானங்களை இணைய வர்த்தகம் மூலம் விற்பதால் காலப்போக்கில் பல குடும்பங்கள் அழியும் நிலை ஏற்படும்” என்று அவர் கூறினார்.