பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும் போலியோ நோய் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஒழிக்கப்பட்டாலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை.
இதனால், நம் நாட்டில் போலியோ நோய் பரவ வாய்ப்புள்ள காரணத்தினால் தற்போது ரோட்டரி சங்கம் சார்பில் நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து இரண்டு விழிப்புணர்வு ஜோதி பயணம் இன்று காலை தொடங்கியது. ஒரு ஜோதி பயணம் கன்னியாகுமரியிலிருந்து மேற்கு பகுதியான கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா வழியாக காஷ்மீர் சென்றடைகிறது.
அதேபோல், மற்றொரு விழிப்புணர்வு ஜோதி பயணம் கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு பகுதி வழியாக மதுரை, திருச்சி, சென்னை, ஆந்திரா, தெலங்கானா, ஓடிசா வழியாக காஷ்மீரில் நிறைவடைகிறது. ஜோதி பயணத்தின் தொடக்க விழாவிற்கு மாவட்ட ரோட்டரி ஆளுநர் ஷேக் சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'நேற்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்...' - மைதானத்திற்குள் ராஜநடை போட்ட குவாடன்!