கன்னியாகுமரி: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தலைமை காவலர், அது பலனளிக்காமல் உயிரிழந்தார்.
பத்துகாணி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (54). இவர் திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
அங்கு உடல்நலம் சரியில்லாமல் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைகாக அனுமதிக்கpபட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். இச்சூழலில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு கரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.