குமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், காவல்துறையினர் சார்பாக பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடும்போது சில நேரங்களில் தகராறு ஏற்படுவதும், தாக்குதல் நடப்பதும் அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை எளிதாக கண்டறியவும் காவல்துறையினர் தங்கள் சட்டையின் மீது பொருத்திக்கொள்ளும்படியான கேமரா குமரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் உள்ள சிக்னலில், காவல் ஆய்வாளர் இசக்கிமுத்து இந்தக் கேமராவை அணிந்தபடி பணி செய்து வருகிறார்.
இந்த வழிமுறைகளால் குற்றவாளிகளை ஏளிதாக கண்டறியலாம் என காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.