ETV Bharat / state

வட்டிக்கு கடன் கொடுக்காததால் வெட்டி படுகொலை.. கைதானவரின் பரபரப்பு வாக்குமூலம்! - Kanyakumari murder for money

Kanyakumari Crime: கன்னியாகுமரியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபரை வெட்டி படுகொலை செய்து விட்டு, அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபரை வெட்டி படுகொலை
வட்டிக்கு பணம் கொடுக்காததால் வெட்டி படுகொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 1:53 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர், ஜேம்ஸ் (55). இவருக்கு திருமணமாகி ஜெயராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜேம்சின் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலில் திருவிழா நடைபெறுவதால், வீட்டில் உள்ள அனைவரும் கோயிலுக்குச் சென்ற நிலையில், ஜேம்ஸ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து திருவிழாவிற்குச் சென்றவர்கள் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், ஜேம்ஸ் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடி கொண்டிருந்துள்ளார்.

இதனால், படுகாயமடைந்த கணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பளுகல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையிலான காவல் துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜேம்ஸை கத்தியால் வெட்டி கொலை செய்த மர்ம நபர், மரணம் அடைந்த ஜேம்ஸ் வீட்டிலிருந்து ரூ.3 லட்சம் பணம், ஏழரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், கொலை செய்த நபர் அந்தப் பகுதி வழியாக தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், மருதங்கோடு கனக்குலம் கரையைச் சேர்ந்த தொழிலாளி சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, என்ன காரணத்திற்காக இந்த கொலை நடந்தது, இருவருக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிரச்னை உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இவ்வாறு போலீசார் நடத்திய விசாரணையில், கைதான சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், பல நாட்களாக ஜேம்சிடம் வட்டிக்கு கடன் கேட்டும் தரவில்லை. இதனால் அவர் வீட்டிற்குச் சென்று கடன் கேட்ட நிலையில், அவர் தர மறுத்ததால் அங்கிருந்த சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். மேலும், அங்கிருந்த வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, அவரிடமிருந்து 3 லட்சம் பணம் மற்றும் ஏழரை சவரன் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கொலை செய்த சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை போலீசார் கைப்பற்றினர்.

இதையும் படிங்க: கும்பகோணம் விஸ்வநாதர் கோயில் தனிநபர் பட்டா ரத்து செய்ய உத்தரவு - வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.