கன்னியாகுமரி கருங்கல்லை அடுத்த விழுந்தையம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி இங்குள்ள கல்லுநாட்டி கூட்டுறவு ரேஷன் கடையில் ரேஷன் அரிசி வாங்கியுள்ளார். வீட்டில் சென்று, அதில் ஒரு கப் ரேஷன் அரிசி எடுத்து சமையல் செய்யத் தயாராகும் போது, ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதை கண்டுபிடித்தார்.
உடனே வீட்டில் நமக்கு என்ன என்று சொல்லி முடங்கி இருக்காமல், அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் தன் கருத்துக்களையும் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண்மணியின் வீடியோவில், “அரசாங்கத்தை நம்பி நாம் ரேஷன் அரிசி வாங்குகிறோம். அதில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளது.
இந்த பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால் நம் வயிற்றுக்கு எவ்வளவு நோய் ஏற்படும். மறைமுகமாக மக்களை கொல்ல அரசாங்கங்களே வழி வகுக்கின்றன. மத்திய அரசு மாநில அரசினுடைய உதவி இல்லாமல் இந்த அரிசி விநியோகம் செய்ய முடியாது. உணவும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் எங்கே போனார்கள். என்ன செய்கிறார்கள்” என கேள்வி எழுப்பினார்.
மேலும், அந்த இல்லத்தரசி ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். மொத்தத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு மறுபுறம் நாம் உண்ணும் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசியை கலந்து, மத்திய மாநில அரசுகள் தருவது நம்மை கொலை செய்வதற்கு சமம் என அந்த இல்லத்தரசி ஆத்திரத்துடன் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: போலீசாரின் கழிவறை தண்டனை.. அங்கேயே லைசால் குடித்த இளைஞர்.. பல மணி நேரத்துக்கு பின் மருத்துவமனையில் அனுமதி..