தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து அரசு அறிவித்தது. எனினும் அதனை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை. எனவே பிளாஸ்டிக் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் நாகர்கோவிலில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாகனப் பரப்புரை பயணம் தொடக்க விழா நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு வாகனத்தை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அதன்படி இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இந்த வாகனம் மூலம் பிளாஸ்டிக் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்யப்படும். மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுங்க' - நீலகிரி மக்கள் வேண்டுகோள்