ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். 36 வயதான இவர் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட விபத்தில் அவரது இடது காலை அகற்றும் நிலை ஏற்பட்டது.
தற்போது இவர் அரசுப்பணிக்காக தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், நெகிழி ஒழிப்பு, நதிநீர் இணைப்பு, போன்றவற்றை வலியுறுத்தியும் தலைக்கவசம், காவலன் SOS செயலி போன்றவை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த, கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பயணத்தை இன்று தொடங்கினார்.
இந்தச் சாதனை முயற்சி பயணத்தை கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வாழ்த்துக் கூறி கொடியை அசைத்து தொடங்கிவைத்தார். ஒற்றைக் காலில் சைக்கிள் மிதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவர் வழிநெடுக மரக்கன்றுகளை நட்டபடியே செல்கிறார். இதுபோன்று விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்வது இவருக்கு இது மூன்றாவது முறையாகும். இவரின் இந்தச் சாதனை முயற்சிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க... 'கை' போனால் என்ன? நம்பிக்'கை' இருக்கு ஜெயிக்க!