இதுதொடர்பாக துறைமுக எதிர்ப்பு குழு தலைவர் பார்த்தசாரதி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவிருக்கும் துறைமுகத்தின் காரணமாக மீனவர்களைவிட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
மீனவர்களின் படகுகள் கடலில்தான் இருக்கும். ஆனால் துறைமுகம் அமைப்பதற்காக விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் மீனவர்களைவிட விவசாயிகளே இந்த துறைமுகத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குமர மாவட்டத்தில் துறைமுகம் அமைக்க கூடாது.
இங்கிருந்து இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில்தான் தூத்துக்குடி துறைமுகம் உள்ளது. அங்கேயே இத்திட்டத்தை செயல்படுத்திக்கொள்ளலாம்.
கன்னியாகுமரி சுற்றுலா தலத்துக்கு பெயர் போனது. எனவே இங்கு சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதுடன், ஐடி பூங்கா கொண்டு வந்தால் ஏராளமான குமரி இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த இரு நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்