கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
அதில் குறிப்பாக பொது போக்குவரத்தும், ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே அதனை இயக்க வலியுறுத்தி கலப்பை மக்கள், இயக்கம் நிறுவனத்தலைவர் பி.டி.செல்வக்குமார் தலைமையில் தங்களது வீடுகள், கடைகள் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தனர். அப்போது இலட்சிய திமுக கட்சியின் தலைவர் டி. ராஜேந்தர் தொலைபேசி மூலமாக அவர்களிடம் பேசி தனது ஆதரவை தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: அரசு பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை