ETV Bharat / state

ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டதா எங்கள் வீடுகள்? - அரசு அலுவலர்களுடன் மக்கள் வாக்குவாதம்! - வீடுகளை இடிக்கச் சென்ற அலுவலர்களுடன் மக்கள் வாக்குவாதம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி வீடுகளை இடிக்கச் சென்ற மாநகராட்சி அலுவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

author img

By

Published : Dec 19, 2020, 8:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் 22 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதனை இடிப்பதற்காக மாநகராட்சி அலுவலர்கள் இயந்திரங்களுடன் சென்றுள்ளனர்.

அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்:

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தாங்கள் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டவில்லை, பட்டா நிலத்தில் தான் வீடு கட்டியுள்ளோம். அதற்குரிய வரியையும் செலுத்தி வருகிறோம்.

அவ்வாறு இருக்கும்பட்சத்தில் வீடுகளை எப்படி எடுக்கலாம். வீடுகளை இடிக்க வேண்டுமென்றால் எங்களை கொலை செய்துவிட்டு வீடுகளை இடியுங்கள் என அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறை:

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும், பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்கவில்லை.

அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

மேலும், தங்களுக்கு மாற்று வீடு கட்டி கொடுத்துவிட்டு வேண்டுமானால் வீடுகளை இடியுங்கள் என்றனர். ஆனால், அதற்கு அலுவலர்கள் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: சென்னையில் ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து தள்ளிய அலுவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.