குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் விசித்திரா. இவர் தக்கலை ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகளைச் சரியாக செய்வதில்லை என்பதோடு மட்டுமல்லாமல் ஊராட்சி மன்றத் தலைவர்களையும் அவர்களது கருத்துகளையும் மதிப்பதில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேர்மையாகச் செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பொய் குற்றச்சாட்டுகளை ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூறி வருவதாகவும் இதைக் கண்டித்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் திடீரென அலுவலக பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது ஊராட்சி ஒன்றியக் கவுன்சில் கூட்டத்திற்கு வந்த ஒன்றியக் கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு ஆதரவாகவும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு எதிராகவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதைத் தொடர்ந்து அங்கேவந்த தக்கலை காவல் துறையினர் மூன்று தரப்பினரிடையும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரே அலுவலக வளாகத்தில் மூன்று தரப்பினர் ஒரே நேரத்தில் முத்தரப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
கன்னியாகுமரி: தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்தும், பணியிட மாற்றம் செய்ய கோரியும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.