ETV Bharat / state

ஊராட்சிக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிப்பு : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு - வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வார்டு உறுப்பினர் புகார்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி ஊராட்சிக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வார்டு உறுப்பினர் புகார் அளித்துள்ளார்.

ஊராட்சிக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிப்பு : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

author img

By

Published : Jan 22, 2021, 12:17 PM IST

கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜசெல்வி(44). இவர் கோவளம் ஊராட்சி மன்ற ஒன்றாவது வார்டு உறுப்பினராக இருந்துவரும் இவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு குண்டல் கிராமத்தில் ஒன்றாவது வார்டில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தாணுலிங்க நாடார் பெயரில் ஒரு பொது நூலகமும், ஊராட்சியால் வழங்கப்பட்ட தொலைக்காட்சி அறையும் அந்த அறையில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் அது சம்பந்தமான பொருட்களும் இருந்தன. மேலும் சிறுவர் பூங்கா, சிறுவர்கள் விளையாடும் ராட்டினம், ஊஞ்சல் பலகை உள்ளிட்ட விலை மதிப்புமிக்க விளையாட்டுப் பொருட்கள் இருந்தன.

இதை சிலர் ஆக்கிரமிக்கும் நோக்கில் பின்புறம் உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுச்சுவரை ஜேசிபி இயந்திரம் கொண்டு உடைத்து பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். எனவே ஊராட்சிக்கு சொந்தமான இந்த நிலத்தை மீட்டு, சேதப்படுத்திவிட்டு, பொருட்களை திருடிச் சென்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருமண நாளுக்கு புது ஆடை எடுக்க முடியாத சோகத்தில் ஒருவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.