கன்னியாகுமரி: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்று உச்சத்தில் இருந்தது. நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் தவித்து வந்தனர். ஆக்ஸிஜன் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
மேலும் ஆக்ஸிஜன் தேவையை அறிந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சேமிப்பு நிலையம், ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அரசின் தீவிர நடவடிக்கையால் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மூன்று கோடி ருபாய் செலவில் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.
இதன் மூலம் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதனை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: ஆக்சிஜன் உற்பத்தி மையம் ராணுவ மருத்துவமனையிடம் ஒப்படைப்பு