ஒடிசா மாநிலம் கஜபதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 2015ஆம் ஆண்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக அவரை பற்றி எந்த தகவலும் இல்லாததால், ஒடிசாவில் உள்ள காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்
அதன்பேரில், நாகர்வோவில் விரைந்த ஒடிசா தனிப்படை காவல் துறையினர், அந்த பெண் வேலைபார்த்த தனியார் தொழிற்சாலையில் விசாரணை நடத்தினர். தனிப்படை காவல்துறை அலுவலர்களுடன் துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர், குழந்தைகள் நல அலுவலர் ஆகியோரும் உடனிருந்தனர்.
அப்போது, அந்த பெண் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் ஒடிசா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.