ETV Bharat / state

தனிமைப்படுத்தப்பட்டு முகாமில் இருந்த நபர் உயிரிழப்பு - தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் ஒருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: சவுதி அரேபியாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த முகமது ரியாஸ் என்பவர் தனிமைப்படுத்தும் முகாமில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சவுதியில் இருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டு முகாமில் உயிரிழப்பு

author img

By

Published : Jul 10, 2020, 8:01 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோட்டை சேர்ந்தவர்
முகமது ரியாஸ் (38). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சவுதி அரேபியாவில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ( ஜூலை 9)இரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின் அங்கிருந்து தனது வீட்டிற்கு வரும் வழியில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் பரிசோதனை முடிவு வரும் வரை அவரைத் தனிமைப்படுத்த கன்னியாகுமரி கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து வந்தனர்.

விடுதியில் ரூம்பாயுடன் அறைக் கதவை திறந்து உள்ளே சென்ற முகமது ரியாஸ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து உடனடியாக கன்னியாகுமரி காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இத்தகவலின் பேரில் கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் சம்பவ இடத்திற்கு வந்து முகமது ரியாஸை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்வு முடிவுகளும் கரோனா பரிசோதனை முடிவுகளும் வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியவரும்.
இவருக்கு ஏற்கனவே ஒரு முறை ஹார்ட் அட்டாக் (Heart attack) வந்து சிகிச்சை பெற்றுள்ளார். மீண்டும் இதுபோன்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.