ETV Bharat / state

கட்டுப்பாட்டை இழந்து உப்பளத்தில் பாய்ந்த கார்: ஒருவர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி:  நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் உப்பளத்தில் பாய்ந்த விபத்தில் காரிலிருந்த பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

one-dead-two-injured-in-kanniyakumari-car-accident
one-dead-two-injured-in-kanniyakumari-car-accident
author img

By

Published : Dec 24, 2019, 5:07 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே இராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அஸ்வின், ஆசிக். இவர்களது நண்பர் தளவாய்புரத்தைச் சேர்ந்த எமலின். பொறியாளரான எமலின், அவரது நண்பர்கள் அஸ்வின், ஆசிக் ஆகிய மூன்று பேரும் ஒரு காரில் மேற்கு கடற்கரை சாலையில் ஈத்தாமொழியிலிருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

ராஜாக்கமங்கலம் அருகே கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் வளைவில் வரும்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பு வேலியில் மோதி, உப்பளத்தில் உள்ள தண்ணீரில் பாய்ந்தது. இதில் காரிலிருந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்களில் எமலின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கட்டுப்பாட்டை இழந்து உப்பளத்தில் பாய்ந்த கார்

இந்த விபத்தில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய இருவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதையும் படிங்க: ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து -12 பேர் காயம்!

Intro: கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் உப்பளத்தில் நிலை தடுமாறி கார் பாய்ந்ததில் காரில் இருந்த பொறியாளர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Body:நாகா்கோவில் அருகே இராமன்புதூர் பகுதியை சேர்ந்த அஸ்வின், ஆசிக் மற்றும் அவரது நண்பர் தளவாய்புரத்தை சேர்ந்த எமலின் ( வயது 32 ). இவர் பொறியாளர் ஆவார். இவர்கள் மூன்று பேரும் ஒரு காரில் மேற்கு கடற்கரை சாலையில் ஈத்தாமொழியிலிருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ராஜாக்கமங்கலம் அருகே கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் வளைவில் வரும்போது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோர தடுப்பு வேலியில் மோதி உப்பளத்தில் உள்ள தண்ணீரில் பாய்ந்து. இதில் காரில் இருந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்களில் எமலின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.