ETV Bharat / state

ஃபெஞ்சல் புயல்: கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடி விசிட்; களநிலவரங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! - CYCLONE FENGAL

சென்னை மாநில அவசரகால செயல்பட்டு மையத்தில் நேரடியாக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், களநிலவரங்கள் குறித்து நேரில் ஆய்வு நடத்தினார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 12:21 PM IST

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2024) சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரும் மேற்கொள்ளப்பட்டு குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

புயல் காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை : வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று (30.11.2024) காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை : இன்று (30.11.2024) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை விபரம், முகாம்கள் விபரம், தண்ணீர் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து தக்க அறிவுரைகள் வழங்கினார்.

நிவாரண முகாம் : புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் நபர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.

மழை நீர் வெளியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு சீரமைப்பு : மழை நீர் தேங்கும் இடங்களில், உடனடியாக மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், புயலின் காரணமாக மரங்கள் விழுந்தால் அதனை உடனே அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக மின் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மருத்துவ சேவை : மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் அறிவுறுத்தினார்.

தற்போதைய நிவாரணப் பணிகள் : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள நிவாரண மைய கட்டடங்கள் அனைத்து வசதிகளுடன் தயாராக உள்ளன. தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.

அம்மா உணவகத்தில் இலவச உணவு : சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கட்டுப்பாட்டு அறை : மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து தொலைப்பேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுடன் கலந்துரையாடல் : செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் முத்தமிழ் மன்ற நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர், அவர்களிடம் அங்கு செய்து தரப்பட்டுள்ள உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழ்நாடு அரசின் ஆயத்த நடவடிக்கைகள் பேரிடர் மீட்புக் குழுக்கள் : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா 3 குழுக்களும், கடலூர், தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 2 குழுக்களும் ஆக மொத்தம் 18 பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு அலுவலர்கள் : தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜீவ் காந்தி : சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கழிவு நீர் உந்து நிலையத்தில் மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேற்றப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூக்கடை பேருந்து நிலையம் அருகிலுள்ள கழிவு நீர் உந்து நிலையத்தில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உணவு தயாரிக்கும் பணிகள் பார்வை : பொதுமக்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கப்படும் பணிகளை பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு அதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்தி வந்திருக்கிறது.

இதையும் படிங்க: புயல் கரையைக் கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்பு கொண்டு அங்கு இருக்கக்கூடிய கள நிலவரங்களை குறித்து கேட்டு அறிந்தோம். நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் ஓரளவுக்கு அங்கு தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இன்று இரவு நிச்சயமாக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.

சென்னையில் எங்கெங்கு தண்ணீர் தேங்குமோ, அங்கு முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது. அப்படியே பிரச்னைகள் இருந்தாலும், அதை சமாளித்துக் கொள்ளலாம்,” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.