இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், அலுவலர்கள் மத்தியில் பேசியதாவது:
அனைத்துத் துறைகளின் வழியாக நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்குவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களிலுள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும்.
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக் கிளைகளை அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்றுவரும் அனைத்து பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி வாயிலாக நடைபெற்றுவரும் சாலைப் பணிகளை உடனடியாக முடித்து விட வேண்டும்.
பழுதான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதேபோல் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அளவினை கண்காணித்து, தாழ்வான பகுதியிலும், கரையோரப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படாதவாறு அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பருவமழை முன்னெச்சரிக்கை - குமரி மாவட்ட ஆட்சியர் ஆலோசனை - Kanniyakumari
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று (நவ. 18) ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.