தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் முக்கியமானது துத்துக்குடி உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில். இந்த ஆண்டு இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா நாளை நடைபெறுகிறது.
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு கடந்தாண்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. ஆனால், இந்தாண்டு நாளை வைகாசி விசாக விழா உவரியில் நடைபெறுகிறது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குமரி மாவட்டத்திற்கு இதுவரை உள்ளூர் விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்தாண்டு வைகாசி விசாக திருவிழாவிற்கு குமரி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவிக்காதது, அரசு அலுவலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.