கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியார் மருத்துவ மனைக்கு நிகராக அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும், கேரளா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைகாக வந்து செல்கின்றனர்.
ஆனால் தற்போது அரசின் அலட்சியப் போக்கால் போதிய சிகிசைகள் கிடைக்காமல் நோயாளிகள் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில், குறிப்பாக இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் ஒன்றரை மாதங்களாக மருத்துவர்கள் இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட இருதய நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கத்தினர் நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதி திராவிlர் முன்னேற்ற இயத்தின் தலைவர் விக்டர் தாஸ் பேசுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வருகை தந்து 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருதய ரத்த நாள அடைப்பு நீக்கப் பிரிவை தொடங்கி வைத்தார்.
ஆனால் இங்கு மருத்துவர் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் சம்பந்தபட்ட பிரிவு முடக்கபட்டு உள்ளதாக தெரிகிறது. இருதய ரத்த நாள அடைப்பு நீக்க பிரிவிற்கு உடனடியாக மருத்துவர்கள் நியமிக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
கன்னியாகுமரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதி - அமைச்சர் விஜய பாஸ்கர்