ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டம்: குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்!! - புத்தாண்டு 2023

கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை. மாவட்ட முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கூறினார்

புத்தாண்டு கொண்டாட்டம்: குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்

author img

By

Published : Dec 31, 2022, 12:07 PM IST

புத்தாண்டு கொண்டாட்டம்: குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்

கன்னியாகுமரி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 5 ஆண்டுகளில் ஏற்பட்ட குற்றச் சம்பவங்கள் குறித்து நாகர்கோவிலில் கணக்கீடு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

மாவட்டத்தில் லெமூர் கடற்கரை, சங்குத் துறை, கன்னியாகுமரி கடற்கரை, முட்டம் கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, மேலும் பீச்சில் உள்ள பூங்காக்கள் உட்பட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் சென்று புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது.

தனியார் விடுதிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு பொறுப்பு உள்ளது. கொண்டாட்டங்களின் போது சக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும். தனியார் விடுதிகளில் நடைமுறையில் உள்ள அனுமதியின் படி புத்தாண்டு கொண்டாடலாம்.

பைக் ரைஸ், அதிக சப்தம் ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் வழக்கு தொடரப்படும். புத்தாண்டு முன்னிட்டு அதிக சத்தம் ஏற்படுத்தும் விதமாக பாடல்கள் போட அனுமதி இல்லை.

புத்தாண்டை ஒட்டி மாவட்டம் முழுவதும் 80 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை மற்றும் மலைப்பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. 2022ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த வித பெரிய அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. அதற்காக அனைத்து காவலர்களுக்கும் நன்றி கூறுகிறேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மார்கழி திருவிழா: தாணுமாலயசாமி கோயிலில் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.