கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய அளவிலான ஓடோ கை கராத்தே போட்டி நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற 22ஆவது ஓடோ கை கராத்தே போட்டியில் இந்தியாவின் 16 மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல் நாள் போட்டியில் வீரர், வீராங்கனைகளுக்கு கட்டாஸ் போட்டியும், இரண்டாம் நாள் வயதுகளின் அடிப்படையில் சண்டை போட்டிகளும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் அணி முதலிடத்தையும், மேற்கு வங்க அணி இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு அணி மூன்றாமிடத்தையும் பெற்றன. போட்டியில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அகில் இந்திய கராத்தே சங்க இணைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் பரிசுகளை வழங்கினார்.