சமீபத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இந்நிலையில், அவரது அரசியல் நிலைப்பாட்டை திமுக ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ”தமிழ்நாட்டில் நான் ஒருவன் மட்டுமே ஆரம்ப காலத்திலிருந்தே ரஜினி கட்சி தொடங்கமாட்டார் என்று உறுதியாகக் கூறிக்கொண்டு இருந்தேன். தற்போது அதற்கு முடிவு கட்டும் விதமாக அரசியலுக்கு என்னுடைய உடல் நலம் ஒத்துழைக்காது என்று அவரே கூறிவிட்டார்.
திராவிடம் வீழாது
அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களும் அவரை ஏற்கக்கூடிய மனநிலையில் இல்லை. திராவிட இயக்கத்தை வீழ்த்துவதுதான் அவர்களது இலக்கு. அதற்கான சாத்தியம் தமிழ்நாட்டில் இல்லை என்று தெரிந்துகொண்ட பிறகு, இந்த முடிவை ரஜினி அறிவித்திருக்கிறார்.
கேரள அரசியல்
திருவனந்தபுரத்தில், 21 வயது மாணவி ஆர்யா ராஜேந்திரன் மாநகராட்சி மேயராக பதவி ஏற்றிருக்கிறார். அவர் நினைவு தெரிந்த நாளில் இருந்தே கையில் செங்கொடி ஏந்தி களமாடியிருக்கிறார். ஆனால் ரஜினி அப்படியா? ஆர்யா ராஜேந்திரனோடு ரஜினிகாந்தை ஒப்பிடுவதே பாவம்.
வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும். பாசிச பாஜகவை எதிர்க்கக்கூடிய ஒரே வலிமையான அமைப்பு திமுகதான். வரும் தேர்தலில் நான் பாஜகவை எதிர்த்துதான் பரப்புரை செய்வேன். பாஜகவையும், அதிமுக ஊழலையும் விமர்சித்து பரப்புரையில் ஈடுபடுவேன்” என்றார்.
இதையும் படிங்க:இரண்டாக உடையும் அதிமுக? - அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன பதில்