கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தெ.தி. இந்துக் கல்லூரி. இக்கல்லூரியில் 1967ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் இன்று பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாங்கள் படித்து முடித்த 50ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக முன்னாள் மாணவர்களின் 'ரீயூனியன் சந்திப்பு' நிகழ்ச்சி (நவ.23) நேற்று நடைபெற்றது. ஒரே வகுப்பில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாணவர்கள் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்து கொண்ட அவர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் கேக் வெட்டி, இந்த ரீயூனியன் சந்திப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கல்லூரி காலத்தில் நடந்துகொண்ட விதம், பழகிய பழக்கம், அவர்களுக்குள் இருந்த நட்பு, காதல், அவர்கள் செய்த சேட்டைகள் போன்றவைகளின் நினைவுகளையும் தனது பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஆண்டுதோறும் இதுபோன்று ஒரு தருணத்தில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 2000 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி!