கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவிலில் நேற்று (ஜூலை 16) உணவு திருவிழா நடைபெற்றது. நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சுவை மிகுந்த உணவுகளான மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், கருப்பட்டி அல்வா போன்றவைகள் இந்த உணவு திருவிழாவில் கொண்டுவரப்பட்டன.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள சமையல்காரர்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு இந்த திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள், குழந்தைகளுடன் வருகை தந்து தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற உணவுகளை ஒரே இடத்தில் சுவைத்து மகிழ்ந்தனர். மேலும், அதை தாங்களும் வீடுகளில் சென்று செய்வதற்காக ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க: அரசு டாஸ்மாக் கடையால் பொது மக்களுக்கு இடையூறு இல்லை... கடையை பூட்ட உத்தரவிடமுடியாது-உயர் நீதிமன்றம்