கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சிவராம பெருமாள். இவர் திங்கள்கிழமை (அக்.26) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் உயிரிழப்புக்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆகியோர் தன்னை மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
இதனை கைப்பற்றி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட டாக்டர் கடைசி நிமிடத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீப்போல் பரவி வருகிறது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனிதநேயமிக்க இளம் மருத்துவர் டெங்குவிற்குப் பலி