ETV Bharat / state

நாகராஜா கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - நாகராஜா கோவில்

கன்னியாகுமரி: புகழ்பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

temple
temple
author img

By

Published : Jan 20, 2021, 1:25 PM IST

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகராஜா கோவிலில், தைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒன்பதாம் நாளன்று தேரோட்டம் நடைபெறும்.

கோவில் மூலஸ்தானத்தில் உள்ள நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாகருக்கு என மூலஸ்தானம் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகராஜா கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நாகராஜா கோவில் அமைந்துள்ள காரணத்தினாலேயே இவ்வூருக்கு நாகர்கோவில் என்ற பெயர் வந்தது. தைத்திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மருதமலை கோயில் திருக்கல்யாண நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.