கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் அரசின் ஊரடங்கு தளர்வு படி, வழிபாட்டுத் தலங்கள் நாளை (செப்.1) முதல் திறக்கப்படவுள்ளன.
இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கோயில்களின் நடைகள் திறக்க தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் மாநாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் இன்று (ஆக.31) ஈடுபட்டனர்.
அந்த வகையில் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதே போல் சுசீந்திரம் தானுமாலைய சுவாமி கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட கோயில்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயில் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!