ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா - விலையில்லா மடிக்கணினி

கன்னியாகுமரி: ஜேம்ஸ்டவுன் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.

laptop
author img

By

Published : Jul 6, 2019, 1:37 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஜேம்ஸ்டவுன் அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கலந்துக்கொண்டு 36 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எம்.பி. வசந்தகுமார், குமரி மாவட்டத்தின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ஜேம்ஸ்டவுன் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. இதில் பேசிய எம்பி வசந்தகுமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் ஜேம்ஸ்டவுன் அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் குமரி மாவட்ட காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கலந்து கொண்டு 36 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து வசந்தகுமார் எம்பி கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான வசதிகள் இல்லை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் உயர் சிகிச்சைக்காக பக்கத்து மாநிலமான திருவனந்தபுரத்திற்கு அலைகின்றனர்.
எனவே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த மருத்துவமனையை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.