கன்னியாகுமரி: உலக கல்லீரல் அழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28ஆம் தேதி அனுசரிக்கபட்டு வருகிறது கல்லீரல் அழற்சி அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக கல்லீரல் அழற்சி தினம் மற்றும் 75ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி தாளாளர் லீலா ராஜேத்தின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமை தக்கலை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சாஸ்தா தொடங்கிவைத்தார்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதையடுத்து ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு மருத்துவ அலுவலர் சான்றிதழை வழங்கினார்.
கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு நோய்கள் வருவதாக கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே உலக கல்லீரல் அழற்சி தின விழாவில் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் - 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்