உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துவரும் நிலையில் இதனை தடுக்கவும் முற்றிலும் ஒழிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த உத்தரவுகளை தொடர்ந்து ஏழைகள், ஆதரவற்றோர்கள் பசியாறும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக சார்பில் மோடி கிச்சன் தொடங்கப்பட்டு அதன் மூலம் தினசரி 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறும்போது, மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தியுள்ள உத்தரவுகள் கொஞ்சம் கடுமையானது என்றாலும் இது மக்களின் நலனுக்காக போடப்பட்டுள்ள உத்தரவு என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கரோனா இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் என்றனர்.