ETV Bharat / state

நாகர்கோவில் புதிய மாநகராட்சி அலுவலகம்: திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நாகர்கோவில் புதிய மாநகராட்சி அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.11 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய மாநகராட்சி கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 7, 2023, 3:45 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாநகராட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில், நகராட்சியாக இருந்து வந்த நாகர்கோவில் அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு என புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதனிடையே, நாகர்கோவிலில் இருந்த அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் இருந்த கலைவாணர் அரங்கை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு என சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் அதை இடித்து அகற்றிவிட்டு, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்தது. தற்பொழுது புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து உள்ளது. 2 தளங்களுடன் பிரமிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கூட்ட அரங்கம், லிஃப்ட் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய மாநகராட்சி அலுவலகம் திறப்பு விழா இன்று (மார்ச்.7) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகராட்சியில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலைய மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டார். பின்னர் 52 வார்டு உறுப்பினர்களையும், நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நாகர்கோவில் நகரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 102 ஆண்டுகளுக்குப் பின்னர் நூற்றாண்டை கடந்த நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், திமுகவின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவிலில் நடந்த தோள் சீலைப் போராட்டம் 200வது ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்றார். இதே மாநாட்டில் கலந்து கொண்ட கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த மாநாட்டில் அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் சமூக நீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றான இந்த மாநாட்டில் கலந்து கொண்டதற்கு பெருமைப்படுவதாகவும், சனாதன சாதியப் பாகுபாட்டிற்கு எதிரான சமூக நீதிக்கு அடித்தளமான இந்தப் போராட்டத்தினை மாபெரும் எழுச்சியுடன் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறி அதற்குப் பாராட்டு தெரிவித்தார்.

அப்போது மேலும் பேசிய அவர், சாதி, மதம், அவற்றின் பின்னணியில் உள்ள சாஸ்திரங்கள், புராணங்களின் பேரில் மனிதரை சக மனிதன் பாகுபாடு செய்ததாகவும், இதேபோல ஆணுக்கு பெண் அடிமை ஆகிவிட்டதாகவும் இதற்கு காரணம் மனுநீதி என்றும் கடுமையாக சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோள் சீலைப் போராட்டம் மாநாட்டில் பினராயி விஜயன் வைத்த ட்விஸ்ட்... ஸ்டாலினுக்கு கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.