சென்னை பள்ளிக்கரணையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுகவினர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததால் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்தது.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்தார். அவரை வரவேற்பதற்காக அதிமுகவினர் நிகழ்ச்சி நடைபெறும் தனியார் கல்லூரி அமைந்துள்ள சுங்கான்கடை பகுதியில் சாலையோரங்களில் பேனர்களை வைத்திருந்தனர்.
சென்னையில் நேற்று நடந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும் அந்த உத்தரவுகளை மீறி அதிமுகவினர் குமரி மாவட்டத்தில் பேனர்களை வைத்திருந்தது மக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்களை மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தினர்.பேனர் போர்டுகள் அகற்றம்