கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்க கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
"இந்தி திணிக்கப்பட்டுவிட்டது என கூறி திமுகவினர் பொய்யான வதந்தியை கிளப்பி மாணவர்களை திசை திருப்பி போராட்டத்தை தூண்டுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனது நாக்கை அறுத்துவிடுவதாக கூறும் காங்கிரஸ் கட்சியினர் தைரியம் இருந்தால் எனது அருகில் வரட்டும். அப்போது தெரியும் யார் நாக்கு அறுபடும் என்று.
காங்கிரஸ் தற்போது இத்தாலி காங்கிரஸ். இப்போது அக்கட்சியில் இருப்பவர்கள் இந்தியர்கள் இல்லை. ராஜீவ்காந்தி காதலித்ததற்காக அவர்கள் இந்தியாவை ஆள முடியாது. சோனியா இந்தியராக இருந்திருந்தால் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் பிணமாகி இருக்க மாட்டார்கள். விலை வாசி உயர்வு என்பது இயல்புதான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பால் விலை குறைவு.
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுபஸ்ரீ குடும்பத்திற்கு உதவி செய்ய அரசு தயாராக உள்ளது.
எந்த காரியத்தை செய்தாலும் விளம்பரத்துடன் செய்வது ஸ்டாலினின் வேலை, எந்த விளம்பரமும் இல்லாமல் மக்கள் தொண்டு செய்வது எடப்பாடி பழனிசாமியின் வேலை. பச்சை தமிழன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை உலகம் பாராட்டுகிறது. திமுகவின் செயல்பாடு மட்டமாக இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:
'கருணாநிதியாலேயே செய்யமுடியல ஸ்டாலின் செஞ்சிடுவாரா என்ன?' - ரகளைய தொடங்கிய ராஜேந்திர பாலாஜி