ETV Bharat / state

இரணியல் அரண்மனை மறுசீரமைப்புப் பணிகள்: அமைச்சர் ஆய்வு - கன்னியாகுமரி அண்மைச் செய்திகள்

இரணியல் வேணாட்டு அரசர்கள் அரண்மனையில் நடைபெற்றுவரும் மூன்று கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மறுசீரமைக்கும் பணிகளை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

ஆய்வு
ஆய்வு
author img

By

Published : Jun 29, 2021, 8:12 AM IST

கன்னியாகுமரி: இரணியல் வேணாட்டு அரசர்கள் அரண்மனை, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. தற்போது இங்கு அரசு சார்பில் மூன்று கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மறுசீரமைப்புப் பணிகள் குறித்து நேற்று (ஜூன் 28) நேரில் ஆய்வுசெய்தார். அப்போது அவர் பேசுகையில், “குமரி மாவட்டம் இரணியலில் அமைந்துள்ள இந்த அரண்மனை கிபி 12ஆம் நூற்றாண்டிலிருந்து வேணாட்டு அரசர்களால் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையாகக் கருதப்படுகிறது. ஆனால், நீண்ட காலமாகப் பராமரிக்கப்படாத காரணத்தால், அரண்மனை இப்போது பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, இந்த அரண்மனையை மறுசீரமைத்து தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையாக மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இரணியல் அரண்மனையைச் சீரமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணியினைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்னிடமும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கவனத்திற்கும் கொண்டுவந்தார்.

அதனடிப்படையில் அரண்மனையை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மறு சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடிக்க இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சீரமைக்கும் பணிகளுக்கு அதிகமாக நிதி தேவைப்படும்பட்சத்தில், முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி அதிக நிதியைப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது சேதமடைந்த இரணியல் அரண்மனை கட்டடம் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, தென்பகுதிப் பாகங்களில் பழுதடைந்த கட்டுமானங்கள், கூரைகளை கவனமுடன் அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.

மேலும் முதல்கட்டமாகப் புனரமைப்புப் பணிக்குத் தேவைப்படும் தேக்கு மரங்கள் 1,500 கனஅடி தனிவகை செங்கல்கள், சுண்ணாம்பு, ஆற்றுமணல் ஒப்பந்தக்காரர்கள் தேர்வுசெய்யப்பட்டு தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் சிறிய அளவில், ஐந்து பணியாளர்கள் மூலம் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்றார்.

இதையும் படிங்க: கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு வீடு: பயனாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.