ETV Bharat / state

‘பப்ஜி மதன் வழக்கில் தமிழ்நாடு காவல் துறை முறையாக விசாரிக்கிறது’ - அமைச்சர் மனோ தங்கராஜ்

பப்ஜி மதன் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை முறையான விசாரணை மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்
author img

By

Published : Jun 15, 2021, 5:33 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் ஏற்கனவே எட்டு எல்காட் மையங்கள் உள்ளன. நேற்று (ஜூன்.15) கங்கைகொண்டானில் உள்ள எல்காட் மையத்தை சென்று ஆய்வு செய்தோம். தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற கட்டமைப்புகளை உருவாக்கி, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் கடந்த 10 ஆண்டுகளாக சரிவரச் செயல்படவில்லை. ஆகவே ஏற்கனவே இருக்கும் இந்த மையங்களை சிறப்பாக செயல்பட வைக்கத் தேவையான திட்டங்களை உருவாக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ளும்.

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏராளமான படித்த இளைஞர்கள் கணனித் தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாக இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில், தமிழ்நாடு தற்போது கடைசி இடமான ஐந்தாம் இடத்தில்தான் உள்ளது. அதனை முதல் நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

பப்ஜி மதன் வழக்கில், காவல் துறை முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவதூறுகளைப் பரப்புவது, வெறுப்பு கக்குவது, மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது, பெண்களுக்கு எதிரான வன்மத்தை தொலைத்தொடர்பை பயன்படுத்தி செய்வது என இவை எதுவுமே ஏற்புடையது இல்லை. இதை கட்டுப்படுத்த வேண்டிய கடமை காவல் துறைக்கும், அரசுக்கும் இருக்கிறது. அதைத்தான் தற்போது செய்து வருகிறோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: இ-பாஸ் இணையதளத்தைப் பயன்படுத்தி வெளியே வர முயலாதீர் - அமைச்சர் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.