கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக மணல், கருங்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பொய்கை அணை பகுதிகளில் செம்மண் கடத்துவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல்துறையினர் அணை அருகே செம்மண் அள்ளிக் கொண்டிருந்த வாகனங்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது மண் அள்ளிக் கொண்டிருந்த 14 டெம்போக்கள், 3 ஜெ.சி.பி. இயந்திர வாகனங்களை பறிமுதல் செய்த காவலர்கள், மணல் கடத்தில் ஈடுபட்ட ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட்டை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர்.