தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி நாகர்கோவிலில் அவரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அதிமுக மருத்துவ அணிச் செயலாளர் அலுவலகத்தில் எம்ஜிஆரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. பின்னர் அவரது உருவப்படத்திற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சி.என். ராஜதுரை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆந்திர முதலமைச்சருக்கு சிபிஐ சம்மன்!.
அதனையடுத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.