ETV Bharat / state

'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இனி இருக்காது' உறுதியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் - உறுதியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி அருகே "எங்கள் கடல், எங்கள் பெருமை" என்ற கடற்கரையை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், 'தான் இருக்கும் இடத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருக்காது' என்று உறுதியளித்தார்.

MEGA
கடற்கரை தூய்மை
author img

By

Published : May 21, 2023, 10:15 PM IST

"மெகா பீச் கிளீன் அப்" - கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணி

கன்னியாகுமரி: உலகளவில் மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் கடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. மீன்கள், நண்டுகள், இறால் உள்ளிட்டவை தற்போது இன்றியமையாத உணவுப் பொருட்களாக உள்ளன. அதேபோல், இந்த கடலை நம்பி லட்சக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இத்தனை சிறப்புமிக்க கடல், மனிதர்களின் செயல்பாடுகளால் தற்போது குப்பை கிடங்காக மாறி வருகிறது. மருத்துவக் கழிவுகள், எண்ணெய் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை கடலில் கொட்டப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி காணப்படுகிறது. இதில் கன்னியாகுமரி, கோவளம், சொத்தவிளை, குளச்சல் உட்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் அடங்கும். இந்த கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குப்பைகளை வீசுவதால் கடல் மற்றும் கடற்கரை பகுதிகள் அசுத்தமடைந்து வருகின்றன.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில், "எங்கள் கடல், எங்கள் பெருமை" என்ற முழக்கத்துடன் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று (மே 21) தொடங்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி அருகே மணக்குடி கடற்கரையில் "மெகா பீச் கிளீனப்" என்ற பெயரில் 50-க்கு மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவிகள் உள்ளூர் மக்களுடன் இணைந்து கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு 'மணல் சிற்பம்' திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கரகாட்டம், தப்பாட்டம், பொய்யக்கால் குதிரை போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றிருந்தன. பிறகு, பிளாஸ்டிக் குப்பைகளைப் போடாமல் கடலை தூய்மையாக பராமரிப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், வனத்துறை அலுவலர் இளையராஜா உட்பட ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதை தவிர்க்கும் வகையிலும், நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த 'கடற்கரை தூய்மை பணி' நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.

நேற்றிரவு குமரி மாவட்டத்தில் கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்லும் வாகனங்களை அமைச்சரே நேரில் ஆய்வு செய்தது குறித்து கேட்டபோது, "அமைச்சர்களின் வேலை என்பது ஆய்வுகள் செய்வதுதான். குமரி மாவட்டத்தில் சில இடங்களில் கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் பிரச்னை ஏற்படுவதாக வந்த புகாரின் பேரில், நேற்று இரவில் ஆய்வு செய்தாகவும், இவ்வாறு தவறு செய்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

மேலும் பேசிய அவர், ஆவின் பால் நிரப்பப்படும் பிளாஸ்டிக் கவரின் மைக்ரான் அளவு அதிகமானது. அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவித்ததோடு, இந்த மனோ தங்கராஜ் இருக்கும் இடத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருக்காது என்று உறுதியளித்தார். அத்தோடு, மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பிளாஸ்டிக் நமக்குத் தேவைதான்" என்றார். 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, "பண மதிப்பிழப்பு விஷயத்தில் ஏற்கனவே ஒருமுறை ஏமாந்து விட்டோம். இரண்டாவது முறையாக எங்களையும், பாவப்பட்ட மக்களையும் ஏமாற்ற வேண்டாம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'எங்கும் மது..எதிலும் மது..' இதுதான் திராவிடமாடல் அரசு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.