தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வாளாகத்தில் மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறக் கூடாது. இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்கக் கூடாது. தேசிய நிறைவு நிலைத் தேர்வை (நெக்ஸ்ட்) திணிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.