இதுகுறித்து கன்னியாகுமரி பார்வதிபுரம் கட்சி அலுவலகத்தில் பேசிய அவர், “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், ‘காந்தியின் கனவைத்தான் நாங்கள் நனவாக்கியுள்ளோம். காந்தி சொன்னதன் அடிப்படையில்தான் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளோம்’ என்கிறார். இதனை ஏற்க முடியாது.
அவரின் இந்தக்கருத்து காந்தியை இரண்டாவது முறையாக படுகொலை செய்வதற்கு சமம்” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நடைபெற்றுவருகிறது. அரசாங்கம் நெல் கொள்முதலுக்கு கொடுக்கும் விலை, போதுமானதாக இல்லை என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். குரூப் 2, குரூப் 4 முறைகேடுகளில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்றார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது - முத்தரசன்